ஜோதிடருக்குப் பிணை; வெளிநாடு செல்லவும் தடை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மரணம் நிகழும் என, நாள் ஒன்றினை குறிப்பிட்டுத் தெரிவித்த பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி இன்று புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஜோதிடர் இன்று புதன்கிழமை ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது, அவரை 10 ஆயிரம் ரூபாய் காசுப் பிணையிலும், 10 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டார்.
இதேவேளை, வெளிநாடு செல்வதற்கும் ஜோதிடருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி 26ஆம் திகதி மரணிப்பார் என்று இவர் ஜோதிடம் தெரிவித்த காணொளியொன்று அண்மையில் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், மேற்படி ஜோதிடரை நேற்று செவ்வாய்கிழமை குற்றபுலனாய்வு பிரிவினர் கைது செய்திருந்தனர்.