கிழக்குக் கபாலியின் கூட்டத்துக்கு பெரியவர் வர மாட்டாராம்: ‘மர்மம்’தான் காரணமாம்

🕔 January 31, 2017

Sad - 012றாவூரில் கிழக்கு கபாலியின் தலைமையில்  நாளை நடைபெறவிருந்த நிகழ்வுக்கு ‘பெரியவர்’ வருவார் என்று பெரிதாக விளம்பரப்படுத்தப் பட்டிருந்த நிலையில், ‘பெரிவர்’ ஏறாவூருக்கு வரமாட்டார் என்கிற தகவலொன்று காத்துவாக்கில் கசிந்துள்ளது.

மறைக்கப்பட்ட மர்மங்களில், கபாலியின் வில்லத்தனம் பற்றி, பெரியவர் காதில் ஊதப் பட்டமையினால்தான், விஜயம் ரத்தாகியுள்ளதாம்.

சில நாட்களுக்கு முன்னர், பெரியவரின் கிழக்குப் பிரதிநிதிக்கு மறைக்கப்பட்ட மர்மங்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு அனுப்பப்பட்டிருந்ததாம். இதனைப் படித்து விட்டு ‘காண்டான’ பிரதிநிதி, அது பற்றி கபாலியிடம் விசாரித்தாராம்.

உடனே, அலர்ட்டான கபாலி; “அதுவெல்லாம் பச்சைப் பொய், எனக்கு எதிராக தவிசு செய்த வேலை” என்று, புளித்துப் போன வாய்ப்பாட்டினைப் பாடியதாம். ஆனால், பெரியவரின் கிழக்குப் பிரதிநிதி நம்பவில்லையாம். “அப்பழுக்கில்லாத ஆதாரங்கள் மறைக்கப்பட்ட மர்மத்தில் உள்ளதே, பிறகெப்படி அது பொய்யாகும்” என்று, கபாலியிடம் கேட்டாராம் பெரியவரின் பிரதிநிதி.

இந்த நிலையில், மறைக்கப்பட்ட மர்மங்கள் பற்றிய தகவலை, கிழக்குப் பிரதிநிதிதான் பெரியவரின் காதில் போட்டிருக்க வேண்டும் எனவும் கதைகள் உலவுகின்றன.

கபாலியின் நிகழ்வுக்கு நாளை பெரியவர் வரவில்லையென்றால், கடும் நக்கல்தான்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்