கடல் வழியாக கஞ்சா கடத்திய இந்தியர்கள், தலைமன்னாரில் கைது

🕔 July 7, 2015

Arrested - 01ந்தியாவிருந்து கடல் வழியாக கஞ்சா கடத்தி வந்தபோது, தலைமன்னாரில் வைத்து கைது செய்யப்பட்ட நான்கு இந்தியர்கள் – இன்று செவ்வாய்கிழமை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேற்படி நபர்கள், இந்தியாவிலிருந்து படகு மூலம் 28 கிலோ 100 கிராம் எடை கொண்ட – கேரள கஞ்சாவைக் கடத்தியபோது, தலைமன்னார் கடற்கரையில் வைத்து, நேற்று திங்கட்கிழமை நண்பகல் 12. 30 மணியளவில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21, 24, 28 மற்றும் 30 வயதுடையவர்களாவர்.

இக் கடத்தல் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக் காலமாக, இந்தியாவிலிருந்து கடல் வழியாக – கஞ்சா கடத்தும் நடவடிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்