போர் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி
– பழுலுல்லாஹ் பர்ஹான் –
யுத்தத்தின் போது உயிரிழந்த படையினர் மற்றும் பொலிஸாரின் குடும்பங்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிவரும் போர்வீரர் சேவைகள் அதிகார சபையினால் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
போர்வீரர் சேவைகள் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி கீர்த்திகா ஜெயவர்தன தலைமையில் இடம்பெற்ற மேற்படி உதவி வழங்கும் நிகழ்வில், போர்வீரர் சேவைகள் அதிகார சபையின் தலைவி திருமதி அனோமா பொன்சேக்கா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இதன் போது, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களான 500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் உயிர் நீத்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கு சுய தொழிலை ஆரம்பிக்க தையல் இயந்திரங்களும் அன்பளிப்பு செய்யப்பட்டன.மேலும், இலவச தையல் பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிப் பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, போர்வீரர் சேவைகள் அதிகார சபையின் உப தலைவி திருமதி உபுலாங்கனி மாலகமுவ, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் உட்பட மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள், போர்வீரர் சேவைகள் அதிகார சபையின் பிரதிநிதிகள், மட்டு -அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.