க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான, அனுமதி அட்டைகள்அனுப்பி வைப்பு

🕔 July 7, 2015

Examination dep - 01.பொத.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்குரிய அனுமதி அட்டைகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் – நேற்று திங்கட்கிழமை தபாலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அனுப்பி வைக்கப்பட்டுள்ள அனுமதி அட்டைகளை, உரிய மாணவர்களிடம் உடனடியாக வழங்கி வைக்கும்படி, சகல அதிபர்களையும் பரீட்சைகள் ஆணையாளர் டபள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார அறிவுறுத்தியுள்ளார்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சையானது, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பமாகி, செப்டம்பர் 08 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்