அமைச்சர்கள் சிலரை, அடக்கி வாசிக்குமாறு சந்திரிக்கா அறிவுறுத்தல்

🕔 January 26, 2017

Chandrika - 0987னாதிபதி மைத்திரிபால சிறிசேன – அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என்று, சில அமைச்சர்கள் கூறிவருகின்றமையினை நிறுத்திக் கொள்ளுமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சில அமைச்சர்களை அறிவுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவில் அவ்வாறான யோசனை ஒன்று நிறைவேற்றப்படவில்லை எனவும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதியை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி, அமைச்சர்களிடம் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை அடுத்து, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பற்றி கருத்து வெளியிடுகின்றமையினை, அந்த கட்சியின் அமைச்சர்கள் நிறுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்