சஜின்வாஸ் தொடர்ந்தும் விளக்க மறியலில்

🕔 July 7, 2015

Sajin Vaas - 01முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவை, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு – கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலக வாகனங்களை மோசடியாகப்  பயன்படுத்திய குற்றச்சாட்டில், ஐ.ம.சு.முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை அறிந்ததே.

இந்த நிலையில், இன்று செவ்வாக்கிழமை – சஜின்வாய் குணவர்த்தனவை, பிணையில் விடுவிக்குமாறு, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்று முன்வைக்கப்பட்டது.

இக்கோரிக்கையினை  நீதிபதி நிராகரித்ததோடு – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை, தொடர்ந்தும் 21 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்