அம்பாறை மாவட்டத்தில் தணிந்தது மழை; தெரிந்தது சூரியன்

🕔 January 25, 2017

Raining - 086ம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வந்த தொடர் அடை மழை, இன்று புதன்கிழமை தணிந்துள்ளது.

அதேவேளை, கடந்த மூன்று நாட்களாக, இருள் மூட்டத்துடன் காணப்பட்ட காலநிலை மாற்றமடைந்து, வெயில் எறிக்கத் தொடங்கியுள்ளது.

நீண்ட வரட்சிக்குப் பின்னர், அம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் அழை மழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

எவ்வாறாயினும், இவ்வாறானதொரு மழையின் அவசியம் ஏற்பட்டிருந்த நிலையிலேயே, கடந்த மூன்று நாட்களாக மழை பெய்தது.

நெல் வயல்கள் மற்றும் மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகள் வரட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது.

கடந்த மாரி மழை கிடைக்காமையும், வரட்சி ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமானது.

இந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில்; இறுதி 24 மணி நேரத்தில் நாட்டில் அதிகூடிய மழை வீழ்ச்சி அக்கரைப்பற்றிலும், அதற்கு அடுத்ததாக அட்டாளைச்சேனையிலும் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்