போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரை மோதிய, லெப்டினன்ட் கொமாண்டர் கைது

🕔 January 25, 2017

Arrestடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை, குறித்த  லெப்டினன்ட் கொமாண்டர் செலுத்திய வாகனம் மோதியமையினை அடுத்தே, அவர் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கக்படுகிறது.

குறித்த சம்பவம், பொலநறுவை – தம்புள்ள வீதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது.

பாதிப்புக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் தம்புள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட லெப்டினன்ட் கொமாண்டர், இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments