ஏழு வயது முஸ்லிம் சிறுவன், பௌத்த பிக்குவாக மாற்றம்: தந்தையே விகாரையில் கொண்டு சேர்த்ததாக தகவல்

🕔 January 24, 2017

Muslim boy - 011ழு வயதுடைய முஸ்லிம் சிறுவனொருவன் பௌத்த பிக்குவாக மாறியுள்ள சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது.

பொலநறுவை – திம்புலாகல வன விகாரையிலேயே இவ்வாறு, முஸ்லிம் சிறுவனொருவன் பௌத்த பிக்குவாக மாறியுள்ளான் என்று, பிரதம விகாராதிபதி மில்லானே ஸ்ரீயலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த விகாரையில் இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை, வரலாற்றில் முதல் தடவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவனின் தாயார் வெளிநாட்டில் இருந்தபோது, அவனுடைய தந்தை ஹமீட் இஸ்மாயில் என்பவர், குறித்த விகாரையில் சிறுவனைக் கொண்டு வந்து சேர்த்ததாவும் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குவாக மாற்றப்பட்டுள்ள சிறுவனுக்கு ரத்னபுர ஸ்ரீ சுதர்சனலங்கார எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த சிறுவன் வசிக்கும் மேற்படி விகாரையில் சிங்கள, தமிழ் மற்றும் வேடுவ இனங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இவர்களும் பௌத்த மதத்தைத் தழுவியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்