தாஜுத்தீன் கொலை வழக்கு: முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்
ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை வழக்கு தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு இன்று வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாராஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேராவின் விளக்க மறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற போதே, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் பெப்ரவரி 02 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.