வரட்சி காரணமாக மரக்கறிச் செய்கை, கடுமையாகப் பாதிப்பு

🕔 January 19, 2017

Vegitable - 08– க. கிஷாந்தன் –

லையகத்தில் தற்போது காணப்படும் வரட்சியான காலநிலை காரணமாக மரக்கறி செய்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மலையகத்திலுள்ள காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை மற்றும் கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து காணப்படுகின்றது.

இதேவேளை, தேயிலை தோட்டங்களில் தேயிலை கருகி வருகின்றமையினால், தோட்ட தொழிலாளிகளின் வேலை நாட்கள் குறைந்துள்ளன. இதனால், அவர்களின் வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையக பகுதிகளில் தோட்ட தொழிலாளிகளும், கிராமபுர மக்களும் மரக்கறி உற்பத்தியை மிக சிறப்பாக செய்து வந்தனர். ஆனால் தற்போதைய காலநிலையின் காரணமாக மரக்கறி வகைகளை உற்பத்தி செய்துகொள்ள முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

அதேபோல் மலையக பகுதிகளில் குடிநீர் இல்லாத காரணத்தினால், பொதுமக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் அலைய வேண்டியுள்ளது.

மாடுகளை வளர்ப்பவர்களுக்கு புற்கள் இல்லாத காரணத்தால் பால் உற்பத்தியும் குறைந்திருப்பதாக பால் உற்பத்தியுள்ளார்கள் தெரிவிக்கின்றனர்.

மலையகத்தில் இவ்வாறான காலநிலை தொடர்ந்தும் காணப்பட்டால், மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரிக்கும் நிலை ஏற்படும்.Vegitable - 06

Comments

புதிது பேஸ்புக் பக்கம்