விமல் வீரவன்சவின் பிரதியமைச்சரை ஏன் கைது செய்யவில்லை: நாமல் கேள்வி
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்சவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களைப் போன்று, அவரின் அமைச்சின் பிரதியமைச்சரும் குற்றங்களை பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
கம்பஹாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
குறித்த முன்னாள் பிரதியமைச்சர் கைது செய்யப்படாமல் இருப்பதும், விமல் வீரவங்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதும் அரசியல் பழிவாங்கல் என்றும் இதன்போது நாமல் கூறினார்.
அரசாங்கத்திற்கு எதிரானவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் முதல் கட்டம்தான் விமலின் கைது எனவும், நாமல் தெரிவித்தார்.