ஐ ஃபோன் வடிவில் துப்பாக்கி: ஐரோப்பிய நாடுகள் அச்சம்

🕔 January 14, 2017

I phone gun - 01123மீபத்தில் வெளியான ஐ ஃபோன் 07 தொலைபேசி வடிவிலான கைத்துப்பாக்கியினை, அமெரிக்க நிறுவனமொன்று தயாரித்துள்ளது.

ஏற்கனவே, ஐரோப்பிய நாடுகளில் பொலிஸாருக்கு ஐ ஃபோன் வடிவிலான துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பெல்ஜியம் பொலிஸார் அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள ஐபோன் வடிவிலான துப்பாக்கி குறித்து ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க நிறுவனத்தின் ‘ஐ ஃபோன்’ வடிவிலான கைத்துப்பாக்கி அடுத்த வாரம் சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. அதற்கான முன்பதிவுகள் அதிக அளவில் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளவை போன்ற ஐ ஃபோன் போன்ற துப்பாக்கிகள் போன்றவை, அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் பட்சத்தில், ஐரோப்பிய நாடுகளுக்கும் அவை கிடைக்கும்.

மேலும் இந்த துப்பாக்கியானது தீவிரவாதிகளின் கைகளில் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாகவும், எனவே மக்கள் மற்றும் பொலிஸார் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்