புதிய தேர்தல் முறைமையின் கீழ், உள்ளுராட்சித் தேர்தல்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

🕔 January 10, 2017

local-government-election-0111த்திதேசிக்கப்பட்டுள்ள கலப்பு முறை தேர்தல் முறைமையின் கீழ், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணயக்  குழுவின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதன்போதே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்களான ரஊப் ஹக்கீம், றிசாத் பதியுத்தீன் மற்றும் ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க ஆகியோர் தற்போதைய தேர்தல் முறைமைக்கு ஆதரவாகப் பேசியதோடு, உத்தேச தேர்தல் முறைமையில் சில குறைபாடுகள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் உத்தேச தேர்தல் முறைமைக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தனர்.

இதனையடுத்து நடைபெற்ற சூடான வாதப் பிரதிவாதங்களுப் பின்னர், உத்தேச தேர்தல் முறைமையின் கீழ், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு, ஐ.தே.கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதத்திரக் கட்சி ஆகியவை கூட்டாக ஒப்புக் கொண்டன எனத் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்