சிறுவர் உரிமைச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் குற்றச்சாட்டு

🕔 July 5, 2015

Addi GA - Alayadivembu - 03– வி. சுகிர்தகுமார் –

சிறுவர்களைப் பாதுகாப்பதற்காகவே, சிறுவர் உரிமைச் சட்டங்கள் உருவாக்கப்பட்டனவே தவிர, அவற்றினை தவறாக பயன்படுத்துவதற்காக அல்ல. பாடசாலைகளில் மாணவர்கள் தவறு செய்கின்றபோது ஆசிரியர்கள் தண்டிக்கின்றனர். இதன்போது, சிறுவர் உரிமைச் சட்டங்கள் என்கிற போர்வையினூடாக, தண்டனை வழங்கிய ஆசிரியருக்கெதிராக சிலர் செயற்பட முனைகின்றனர் என்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் தெரிவித்தார்.

இந்துமாமன்ற ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட தமிழ் பாடசாலைக்கிடையில் கடந்த வருடம் நடத்தப்பட்ட, சைவ சமயப் பரீட்சையில் சித்தியடைந்து – முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற கட்டடத்தில், மன்ற தலைவர் வே. சந்திரசேகரம் தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கியதன் பிற்பாடு; உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்ளூ

குற்றம் செய்கின்றபோது மாணவர்கள் தண்டிக்கப்படவேண்டும். சாதனை செய்கின்றபோது பாராட்டப்படவேண்டும். அப்போதுதான் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.

சிறுவர்களைப் பாதுகாப்பதற்காகவே, சிறுவர் உரிமைச் சட்டங்கள் உருவாக்கப்பட்டனவே தவிர, அவற்றினை தவறாக பயன்படுத்துவதற்கல்ல. பாடசாலைகளில் மாணவர்கள் தவறு செய்கின்றபோது ஆசிரியர்கள் தண்டிக்கின்றனர். இதன்போது, சிறுவர் உரிமைச்சட்டங்கள் என்ற போர்வையினூடாக, தண்டனை வழங்கிய ஆசிரியருக்கெதிராக சிலர் செயற்பட முனைகின்றனர். இந்நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும்.

மேலைத்தேய நாடுகளில் உருவாக்கப்பட்ட இச்சட்டம், எமது நாடுகளிலும் ஊடுருவி சிறுவர்களின் சீரழிவிற்கு காரணமாக அமைகின்றன. அவ்வாறான செயற்பாடுகளே இன்று அதிகளவில் அரங்கேறுகின்றன.

குருவை மதிக்கின்ற மாணவ சமுதாயம் இன்று மறைந்து செல்கின்றது. இதற்கு பெற்றோர்களும் காரணமாக அமைகின்றனர். பிள்ளைகளை பெற்றெடுப்பதுடன் பெற்றோர்கள் நில்லாது, நல்வழிப்படுத்தி நற்பிரஜையாக வளர்த்தெடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பரீட்சையை மையமாக கொண்ட கல்விமுறை மாற்றம் பெற்று, நல்ல விழுமியங்கள் உள்ள மாணவ சமுதாயம் உருவாக்கும் கல்வி முறை பின்பற்றப்பட வேண்டும். அவ்வாறான அறநெறிக் கல்வியை போதிக்கும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் போன்ற அமைப்புக்களை பாராட்டவேண்டும்’ என்றார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் உதாரண நாணயக்கார, மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் எஸ். கனகரெத்தினம், மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் உதாரண நாணயக்கார, மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் எஸ். கனகரெத்தினம், மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.Addi GA - Alayadivembu - 01Addi GA - Alayadivembu - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்