யுனானி வைத்தியர்கள் ஒன்றியத்தின் தவிசாளராக டொக்டர் நக்பர் தெரிவு

🕔 January 2, 2017

Dr. Nakfer - 013– றிசாத் ஏ காதர் –

கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமை புரியும் அரச யுனானிவைத்தியர்கள் ஒன்றியத்தின் தவிசாளராக வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல்.நக்பர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆயர்வேத வைத்தியசாலைகளில் கடமை புரியும் யுனானிவைத்தியர்களின் ஒன்றியக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பீச்விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அரச யுனானி வைத்தியர்கள் ஒன்றியத்தின் தவிசாளராகஅட்டாளைச்சேனை தள ஆயர்வேத வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர்கே.எல்.நக்பர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

இவ் ஒன்றியத்தின் உதவித் தவிசாளர்களாக நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின்பொறுப்பதிகாரி டொக்டர் நபீல், டொக்டர் ஜலால்தீன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டதுடன், செயலாளராக டொக்டர் ஐ.எல். அப்துல் ஹை மற்றும் உதவிச்செயலாளர், இணைப்பாளராக டொக்டர் ஹபீல், பொருளாளராக டொக்டர் எம்.வை.இஷாக் ஆகியேரும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேற்படி இந்நிகழ்வில் ஒன்றியத்துக்கான நிருவாகக் குழு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் பிராந்திய இணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

அரச யுனானி வைத்தியர்கள் ஒன்றியத்தின் கூட்டத்தில் 70க்கும் மேற்பட்டவைத்தியர்கள் கலந்துகொண்டனர். மேற்படி ஓன்றியத்தின் நிருவாக காலம்03வருடங்களாகும்.

ஒன்றியத்தின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட கே.எல்.நக்பர்; தன்னை ஏகமனதாகதெரிவு செய்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்தார். மேலும் 2017ம் ஆண்டில் இவ்ஒன்றியமானது திறன்பட செயற்படவுள்ளதாகவும், வைத்தியர்களின் சமூக நலன்சார்விடயங்களில் அக்கறை செலுத்துவதோடு – அவர்களின் உயர்வுக்கும் ஒன்றியம்தன்னாலான முழுப் பங்களிப்பினையும் மேற்கொள்ளும் என்றார்.

இதேவேளை, அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையை தளவைத்தியசாலையாக தரமுயர்த்துவதுக்கு தனது அர்ப்பணிப்புக்கள் எவ்வாறுஇருந்தனவோ, அதேபோல் இவ் ஒன்றியத்தின் வளர்ச்சியிலும் எனதுஅர்ப்பணிப்புடனான  செயற்பாடு காணப்படும் என்றும் டொக்டர் நக்பர் தெரிவித்தார்.

மேற்படி ஒன்றியத்தின் உயர்பீட உறுப்பினர்களாக டொக்டர் கே.எல்.நக்பர்,டொக்டர் எம்.ஏ. நபீல் மற்றும் டொக்டர் ஜலால்தீன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்