மூன்று கோயில்களில் கொள்ளை; சி.சி.ரி.வி.யில் திருடன் சிக்கினான்

🕔 January 1, 2017

robbery-011– க. கிஷாந்தன் –

டிக்கோயா பகுதியிலுள்ள ஆலயங்கள் சிலவற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கோயிலொன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவில், திருடியவரின் உருவம் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

டிக்கோயா அம்மன் ஆலயம், வனராஜா மேல்பிரிவு மருதவீரன் ஆலயம் மற்றும் வனாராஜா விநாயகர் ஆலயம் ஆகியவற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் டிக்கோயா வனராஜா ஆலயத்தில் திருடும் போது, அந்தக் காட்சி கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கமராவில் மிகத்தெளிவாக பதிவாகியுள்ளன.

இத்திருட்டுச்சம்பவத்தில் அம்மனுக்கு சாத்தப்பட்டிருந்த தங்கத்தாலியுடன் கூடிய கொடி, சுமார் 04 லட்சம் ரூபா பெறுமதியான பணம், பிள்ளையாருக்கு சாத்தப்பட்டிருந்த வெள்ளி ஆபரணமும் திருடப்பட்டுள்ளதாகவும், மருதவீரன் ஆலயத்தில் உண்டியல் திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர், ஏற்கனவே பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் இவரை பொலிஸார் தேடி வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

திருடும்  நபர், தொலைபேசியில் உரையாடிக்கொண்டே திருடுவதால் இத்திருட்டுச்சம்பவத்துடன் பலர் தொடர்புபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நபர்கள் தொடர்பாக அறிந்திருந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.robbery-044 robbery-033 robbery-022

Comments