வைத்திய நிபுணர் மீது கத்திக் குத்து

🕔 December 30, 2016

Knife - 034கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் மேற்கொள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த வைத்தியருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வைத்தியசாலை வளாகத்தில் வைத்தே, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர், வைத்தியசாலை வளாகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்