மரதன் போட்டியில் கலந்து கொண்ட பிரதேச சபை ஊழியர் மரணம்

🕔 December 29, 2016

marathon-097ரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட 50 வயது நபரொருவர் இன்று வியாழக்கிழமை காலை மரணமானார்.

நாகொட பிரதேச சபையின் ஊழியர் ஒருவரே இவ்வாறு மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாகொட மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த களியாட்ட நிகழ்வின் ஒரு அங்கமாகவே, குறித்த ஓட்டப் போட்டி இடம்பெற்றது.

ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டமையின் காரணமாக மரணமானவர், நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த உடுகம கமகே பிரேமரட்ன என்பவராவார்.

மரதன் போட்டியில் ஓடிக்கொண்டிருந்த மேற்படி நபர் சரிந்து விழுந்ததாகவும், அதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்