ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் மகன், ஆளுந்தரப்பு பிரதம கொறடா பதவியிலிருந்து நீக்கம்

🕔 December 28, 2016

johan-fernando-012டமேல் மாகாணசபையின் ஆளுந்தரப்பு பிரதம கொறடா பதவியிலிருந்து ஜொஹான் பெனாண்டோ நீக்கப்பட்டுள்ளார். இவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் புதல்வராவார்.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே, குறித்த பதவியிலிருந்து இவர் விலக்கப்பட்டுள்ளதாக, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி திஸாநாக்க தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாணசபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் ஜொஹான் பெனாண்டோ பங்குபற்றாமை காரணமாகவே, ஆளுந்தரப்பு பிரதம கொறடா பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

குறித்த வரவு – செலவுத் திட்ட விவாதம் நடைபெற்ற 04 நாட்களும், ஜொஹான் பெனாண்டோ சபைக்கு சமூகமளிக்கவில்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, வடமேல் மாகாணசபையின் அமைச்சரவை கூடி, ஜொஹான் பெனாண்டோவை குறித்த பதவியிலிருந்து நீக்கும் தீர்மானத்தினை நேற்று செய்வாய்கிழமை எடுத்திருந்தது.

தற்போது மேற்படி பதவிக்கு வடமேல் மாகாணசபை உறுப்பினர் பண்டார ராஜபக்ஜ நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்