ஒற்றையாட்சியை சிதைக்கும் முயற்சிகள், புதிய அரசியல் யாப்பில் இருக்காது: எஸ்.பி. திஸாநாயக்க

🕔 December 28, 2016

SB. Disanayaka - 086ற்றையாட்சியை சிதைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு, புதிய அரசியல் யாப்பில் இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய அரசியலமைப்பின் கீழ் புதி மாகாணங்கள் உருவாக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தமது அமைச்சின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைக் கூறினார்.

அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்; ஒற்றையாட்சியின் கீழ் இந்நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வை வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதுது என்றார்.

நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட பின்னர், இலங்கை மீதான ஐ.நா.வின் அழுத்தம், ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்ப்புகள் போன்றவை சிறிது சிறிதாக மறைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் ஐக்கியத்தை சிதைக்க ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதெனவும் அதற்கேற்றாற் போலவே புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும் இதன்போது தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்