முன்னாள் பிரதம மந்திரி ரட்ணசிறி விக்ரமநாயக்க மரணம்
முன்னாள் பிரதம மந்திரி ரட்னசிறி விக்ரம நாயக்க 83ஆவது வயதில், இன்று செவ்வாய்கிழமை மரணமானார்.
சில நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவர் மரணித்துள்ளார்.
1960ஆம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட விக்ரமநாயக்க, 1962ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.
2000 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் 2005ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலும் பிரதம மந்திரியாகவும் இவர் பதவி வகித்திருந்தார்.
மரணிக்கும் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராகவும் ரட்ணசிறி விக்ரமநாயக்க பதவி வகித்திருந்தார்.
இவருடைய புதல்வர் விதுர விக்ரமநாயக்கவும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.