தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாத்தலுக்கான குழுவில், சிறுபான்மையினரையும் உள்வாங்குமாறு கோரிக்கை

🕔 December 26, 2016

azwer-011– எம்.எஸ்.எம். ஸாகிர் –

நாட்டின் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு தமிழர் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட வேண்டுமென, முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கம் நாட்டின் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை பற்றி கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நாட்டினுடைய தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது வரவேற்கக் கூடியது. முஸ்லிம்கள் தொடர்பாகவும் தமிழர்கள் தொடர்பாகவும் பல தொல்பொருள் பிரதேசங்கள் இருக்கின்றன. ஆகவே,  அவை தொடர்பாகவும் ஆராய்ந்து அவற்றைப் பாதுகாப்பது அவசியமாகும்.

உதாரணமாக பலாங்கொடையில் தப்தர் ஜெயிலானி முஸ்லிம்களோடு தொடர்புடைய ஒரு முக்கியமான வழிபாட்டுத்தலமாகும். ஆகவே, இது தொடர்பாக நியமிக்கப்பட்டிருக்கும் குழவுக்கு முஸ்லிம் மற்றும் தமிழர் பிரதிநிதிகள் ஒவ்வொருவர் உள்வாங்கப்படுவது சிறந்தது.

அப்போதே நாட்டின் முழுமையான தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாக்கக் கூடியதாக இருக்கும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்