‘லிப்ட்’க்குள் வைத்து பாலியல் தொந்தரவு; குவைத் பொலிஸில் இலங்கைப் பெண் புகார்

🕔 December 26, 2016


Rape - 011
லங்கையைச் சேர்ந்த பெண்ணொருவரை, பாலியல் தொந்தரவு செய்த நபரொருவருக்கு எதிராக குவைத் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குவைத் நாட்டின் பர்வானியா பிரதேசத்திலுள்ள கட்டடமொன்றின் ‘லிப்ட் ‘க்குள் வைத்து அடையாளம் தெரியாத நபரொருவர் பாலியஸ் தொந்தரவு செய்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் வசிக்கும் குடியிருப்பிலுள்ள லிப்ட்டின் உள்ளேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விளையாடும் போது அணியும் ஆடையுடன் காணப்பட்ட சந்தேக நபர், குறித்த பெண்ணை தொட்டுத் தழுவியுள்ளார்.

இதன்போது மேற்படி பெண் – அங்குள்ள காவலரை அழைத்தமையினால், சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில், அந்தப் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

Comments