வசீம் கொலை வழக்கு: முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்க மறியல் நீடிப்பு

🕔 December 26, 2016

anura-senanayake-0115முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்கவின் விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 06ஆம் திகதிவரை இவரின் விளக்க மறியலை நீடிக்குமாறு,  கொழும்பு மேலதிக நீதாவான் நிசாந்த பீரிஸ் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை தொடர்பான சாட்சியங்களை நிறுத்தி வைத்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அனுர சேனநாயக்கவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதேவேளை, குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட – நாராயன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேராவின் விளக்க மறியலையும் ஜனவரி 06ஆம் திகதி வரை நீடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்