மேகி நூடுல்ஸில் அபாயகரமான உட்சேர்க்கைகள் இல்லையென கனடா தெரிவிப்பு

🕔 July 3, 2015

Maggi Noodles - 098ந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் ‘மேகி நூடுல்ஸ்’ தயாரிப்புகள் தரமானதாக உள்ளன என்று, கனடாவின் உணவுப் பரிசோதனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கனடா நாட்டு உணவு பரிசோதனை மற்றும் தர நிர்ணய நிறுவனம் குறிப்பிடுகையில்; இந்தியாவில் ‘மேகி நூடுல்ஸு’க்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையினை,  நாங்கள் தொடர்ந்தும் அவதானித்து வருகிறோம். மக்களுக்கு உகந்த பொருட்களை மட்டுமே – எங்களது உணவுப் பரிசோதனை நிறுவனம் பரிந்துரை செய்கிறது.

அதன்படி, எங்களது பரிசோதனையின் முடிவின்படி – ‘மேகி நூடுல்ஸி’ல் அபாயகரமான உட்பொருட்கள் எவையும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது. அதனால் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் ‘மேகி நூடுல்ஸ்’ – தொடர்ந்தும் இங்கு விற்பனைக்கு அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ‘மேகி நூடுல்ஸி’ல் அபாயகரமான உட்சேர்க்கைகள் இல்லையென, ஏற்கனவே சிங்கப்பூர்  அறிவித்திருந்த நிலையிலேயே, தற்போது – கனடா இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

‘மேகி நூடுல்ஸி’ல் அளவுக்கு அதிகமான உப்பு மற்றும் காரீயம் கலந்திருப்பது தெரியவந்ததை அடுத்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் இந்த உணவுக்கு தடை விதித்தன.

இறுதியாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையமும் பரிசோதனை செய்து, ‘மேகி நூடுல்ஸு’க்கு, இந்தியா முழுவதும் கடந்த ஜூன் 05 ஆம் திகதி தடை விதித்ததமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்