ஐரோப்பாவுக்கு அகதிகளாகச் செல்வதற்கு முயற்சித்த ஐந்தாயிரம் பேர் மரணம்

🕔 December 24, 2016

ship-033ரோப்பாவுக்கு அகதிகளாக செல்வதற்கு முயற்சித்தவர்களில், 05 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வருடம் கடலில் மூழ்கி மரணித்துள்ளனர் என்று, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

இவர்கள் ஐரோப்பாவைச் சென்றடையும் வகையில் மத்திய தரைக் கடலினூடாகப் பயணம் செய்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

இத்தாலி கடற்கரைப் பகுதிக்கு அப்பால், கடந்த வியாழக்கிழமை இரண்டு கப்பல்கள் சேதமடைந்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து, மரண எண்ணிக்கை 05 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இத்தாலி கடற் பிரதேசத்தில் இடம்பெற்ற கப்பல் விபத்தில் மாத்திரம் 90 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், குடியேற்றக்காரர்களுக்கு தஞ்சம் வழங்கும் நிபந்தனைகளின் இறுக்கங்களைக் குறைக்குமாறு ஐ.நாடுகள் சபை கோரியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்