ஒழுங்காக செயற்படாத அமைப்பாளர்கள் விலக்கப்படுவர்: சு.கா. செயலாளர் துமிந்த திஸாநாயக்க
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளைக் கோரி சுமார் 500 விண்ணப்பங்கள் தலைமையகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
விண்ணப்பித்துள்ளவர்களில் கணிசமானோர் கட்சியின் பிரபலங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் அனைவருக்கும் அமைப்பாளர் பதவிகளை வழங்குவதற்கு முடியாதுள்ள போதிலும், வெற்றிடம் ஏற்பட்டுள்ள தொகுதி மற்றும் மாவட்டம் என்பவற்றுக்கு இவர்களில் தகுதியானவர்கள் நியமிக்கப்படுவர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களாக தற்பொழுது கடமையாற்றும் சகலருக்கும் கட்சியின் பணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை ஒழுங்காக நிறைவேற்றாதவர்கள் அப்பதவிகளிலிருந்து நீக்கப்படுவர் எனவும் துமிந்த திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.