தனியார் ஊடகங்களுடன் பொலிஸ் திணைக்களம் ‘டூ’

🕔 December 24, 2016

Police logo - 0123னியார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்காதிருப்பதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய நாட்களில் இடம்பெற்ற சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

பொலிஸ் பிரிவுகளில் இடம்பெறுகின்ற சம்பவங்களை, முன்னர் மின்னஞ்சல் ஊடாக அரச ஊடகங்கள் மற்றும் தனியார் ஊடகங்களுக்கு பொலிஸ் தலைமையகம் வழங்கி வந்தது.

இது தவிர பொலிஸ் தலைமையகத்தில் ஊடகப் பிரிவொன்றை உருவாக்கி, இடம்பெறுகின்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்களையும் வழங்கி வந்தது.

தேவையேற்படின் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக இருக்கின்ற உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவிடம் ஊடகமொன்று வினவியபோது, தனியார் ஊடகங்களுக்கு தகவல்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பதாக கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்