களுதாவளையில் விமானத்தின் பாகம் மீட்பு

🕔 December 23, 2016

part-of-flight-011விமானத்தின் பாகம் ஒன்றாக இருக்கலாம் என நம்பப்படும் பொருள் ஒன்று, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்ட களுதாவளைக் கடற்கரையிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை  மீட்டுள்ளது.

கடற்கரை பகுதியில் பாரிய இயந்திரம் போன்றதொரு பொருள் கிடப்பமை அவதானித்த மீனவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அதனை பார்வையிட்ட பின்னர், குறித்த பொருள் விமானத்தின் பாகம் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆயினும், குறித்த பொருள் எந்த நாட்டின் விமானத்தின் பாகம் என்பதை உறுதிபடுத்த முடியாதுள்ள நிலையில், இது தொடர்பில் ஆய்வு செய்வதற்காக குறித்த பாகத்தினை விமானப் படையினர் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்