பண்டிகைக் காலத்தில் பொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது, அதிக விலைக்கு விற்போருக்கு எதிராகவும் நடவடிக்கை: அமைச்சர் றிசாத்

🕔 December 22, 2016

Rishad - 075ண்டிகளைக் காலத்தில் காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட எந்தப் பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது நுகர்வோருக்கு நன்மையளிக்கும் வகையிலான திட்டமொன்றினை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார்.

மேலும், பொருட்களின் விலைகளை வேண்டுமென்று அதிகரித்து விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கெதிராக, உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும்  அவர் கூறியுள்ளார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை, நாடு முழுவதிலும் திடீர் சுற்றுவளைப்புக்களை மேற்கொண்டு, சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கெதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்குமெனவும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை சந்தையில் அரிசி விநியோகத்தை தாராளமாக்கி, விலை அதிகரிப்பை தடுக்கும் வகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்ச்சரவைக்கு முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்