வட்ஸ் அப்பில் அனுப்பிய தகவல்களை இனி திருத்தலாம், அழிக்கலாம்

🕔 December 16, 2016

whatsapp-011ட்ஸ் அப்பில் ஒரு தகவலை அனுப்பி விட்டால் , பிறகு அனுப்பப்பட்ட தகவலை அழித்து விடவோ, திருத்தம் செய்யவோ முடியாது. இது ஒரு பெரிய குறையாகவே இருக்கிறது. இதனை சரிசெய்யும் விதமாக வட்ஸ் அப்பில் அனுப்பிய தகவலை திருத்தம் செய்யும் புதிய வசதியை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

வட்ஸ் அப்பில் அனுப்பிய தகவல்களை திருத்தம் செய்தல் மற்றும் அழித்தல் போன்ற வசதிகள் குறித்த சோதனை முயற்சி ஐபோன்களில் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த முயற்சி வெற்றி பாதையில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் அனுப்பிய தகவல்களை திருத்தம் செய்தாலோ, அழித்தாலோ தகவலைப் பெற்றுக் கொண்டவரின் தொலைபேசியிலும் அவை நிகழும். விரைவில் வட்ஸ் அப்பில் உள்ள தெரிவுகளில் இந்த வசதிகள் இணைந்து விடும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்