ரணில், ஹக்கீம் சந்திப்பு; இணைந்து போட்டியிடுவது குறித்தும் பேச்சு

🕔 July 2, 2015

Hakeem - 098க்கிRanil - 032ய தேசியக் கட்சித்தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை காலையில் ஸ்ரீகொத்தவில் இடம்பெற்றுள்ளது.

இதில் ஐ.தே.க. தவிசாளர் மலிக் சமரவிக்கிரம, அமைச்சர் கபீர் ஹாஷிம் ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவது பற்றி, இதன்போது ஆராயப்பட்டதாக தெரியவருகிறது. இப்பேச்சுவார்த்தை நம்பிக்கையூட்டுவதாகவும், திருப்தியளிப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இது இவ்வாறிருக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீடக் கூட்டம் இன்று விழாயழ்கிழமை இரவு 7.00 மணிக்கு, கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தின் போது, எதிர்வரும் தேர்தலில் – கட்சி போட்டியிடும் விதம் குறித்து ஆராயப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்