சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்தவுக்கு வழங்குமாறு கோரி, வழக்குத் தாக்கல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை வழங்குமாறு கோரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் முன்னாள் உறுப்பினர்களான அருண பிரியசாந்ந மற்றும் அசங்க ஸ்ரீநாத் ஆகியோர் மேற்படி மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.
2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியல்லாத வேறொரு கட்சியின் கீழ் பொது வேட்பாளராக போட்டிருந்தார்.
எனவே அவருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியினை வழங்க இயலாது என குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறிப்பிடப்பட்ட மனுவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 20அம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.