கடற்படைத் தளபதி தாக்கியதாக, ஊடகவியலாளர் முறைப்பாடு

🕔 December 12, 2016

navy-comander-01113லங்கையின் கடற்படைத் தளபதி தன்னைத் தாக்கினார் என்று, ஊடகவியலாளர் திலீப் ரொசான்என்பவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், வேலை நிறுத்தம் செய்யும் பணியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய கப்பலை விடுவிப்பதற்கு, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதனை செய்தியாக்கும் பொருட்டு படம் பிடித்த ஊடகவியலாளர் திலீப் ரொசான் என்பவரை சிவில் உடையில் இருந்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தாக்கியிருந்தார் என குற்றம்சாட்டப்படுகிறது.

தாக்கப்பட்ட ஊடகவியலாளர் திலீப் ரொசான், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹம்பாந்தோட்டை உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் பணியகத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

அதில், நன்கு கொழுத்த, அரைக்காற்சட்டையும், நீலச் சட்டையும் அணிந்திருந்த ஒருவர் தம்மைத் தாக்கியதாகவும், அவர் இலங்கையின் கடற்படைத் தளபதி என்று பின்னர் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் அவர் விபரித்துள்ளார்.

மேற்படி ஊடகவியலாளர் மீது கடற்படைத் தளபதி தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்