துப்பாக்கிச் சூட்டில், பழக்கடை உரிமையாளர் பலி

🕔 December 12, 2016

Gun - 012343டையாளம் தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், அம்பலாங்கொடை – மீட்டியாகொட பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை ஒருவர் உயிரிழந்தார்.

மீட்டியாகொட பிரதேசத்தில் பழக்கடையொன்றை நடத்திவந்த 45 வயது நிரம்பிய ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு, தப்பிச்சென்றுள்ளனர். சடலம்.

உயிரிழந்தவரின் சடலம் பட்டபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மீட்டியாகொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்