டீசலின் விலைகள் இன்று முதல் அதிகரிப்பு

🕔 December 1, 2016

diesel-086நாட்டில் டீசல் வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை முதல் ஐ.ஓ.சீ. நிறுவனத்தின் இரண்டு வகை டீசல்களின் விலைகள் லீற்றருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒபெக் நிறுவனத்தினால் உலக சந்தைக்கு விற்பனை செய்யப்படும் மசகு எண்ணெய்யின் அளவு வரையறுக்கப்பட்டுள்ளமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் எரிபொருள்களுக்கான விலைகள் உலக சந்தையில் வீழ்ச்சியடையத் தொடங்கிய காரணத்தினால், எரிபொருளுக்கான நிரம்பலை வரையறுப்பதற்கு ஒபெக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்