ஊடகவியலாளர்களை தொழிற் தேர்ச்சியாளர்களாக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது: கலாபூசணம் பகுர்தீன்

🕔 November 27, 2016

adjf-098– றிசாத் ஏ காதர் –

கவல் தொழிநுட்பத் துறையில் தேர்ச்சிமிக்கவர்களாக ஊடகவியலாளர்களை பரிணமிக்கச் செய்யும் திட்டமொன்றினை, அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை நடைமுறைப்படுத்த திட்டமிட்டள்ளது என்று பேரவையின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ. பகுர்தீன் தெரிவித்தார்.

பேரவையின் மாதாந்தக் கூட்டம் கல்முனை மிஸ்பாஹ் வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பேரவையின் தலைவர் பகுர்தீன் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

அங்கத்துவ ஊடகவியலாளர்களின் நலன்புரி விடயத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, பேரவையின் நிதி நிலமையினை அதிகரிப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ஊடகவியலாளர்களின் தொழிற் திறனை தற்காலத் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு மேம்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக சில நிறுவனங்களுடன் நாம் பேசியுள்ளோம். அவர்களின் பங்களிப்புடன் நமது பேரவையின் அங்கத்துவ ஊடகவியலாளர்களுக்குப் பயிற்சிகளை வழங்குவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

நமது தொழிற் திறனை மேம்படுத்தும் பொருட்டு, சில நிறுவனங்கள் தமது நிதிப் பங்களிப்பினூடாக நமக்கு உதவ முன்வருகின்றபோதிலும், நம்மில் சிலர் அதன் பெறுமானங்களைப் புரிந்து கொள்வதில்லை.

இலட்சக் கணக்கான ரூபாய்களை செலவு செய்து, தொழிற்பயிற்சிகளை நமக்கு வழங்க சில நிறுவனங்கள் முன்வந்தாலும், அந்தப் பயிற்சியினை நம்மில் சிலர் முழுமையாகப் பிரயோசப்படுத்திக் கொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டொன்று உள்ளது.

எனவே, எதிர்காலத்தில் அவ்வாறான உதவிகள் நமக்குக் கிடைக்கும் போது, அவற்றினை நிறைவாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நவீன உலகில், தொழில்நுட்ப ரீதியான திறமை உடைய ஊடகவியலாளர்கள்தான் அவர்களின் துறையில் மிளிர்கின்றார்கள்” என்றார்.

இதேவேளை,  செயலாளர் எஸ்.சஹாப்தீன் பேரவையின் கூட்டறிக்கையினையும், பொருளாளர் யூ.எல். மப்றூக் கணக்கறிக்கையினையும் சபையில் சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இணையத்தள அறிமுக விழா ஒன்றினை நடாத்துவதற்கு அங்கத்தவர்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

மேலும், மாவட்டத்திலுள்ள வறிய மாணவர்களுக்கான – பாடசாலை உபகரணங்களை இலவசமாக வழங்குவதற்கான யோசனையொன்றும் இதன்போது முன்வைக்கப்பட்டது.adjf-097

Comments

புதிது பேஸ்புக் பக்கம்