தொழில் வெற்றிடங்களை மையப்படுத்தி, பயிற்சிகளை வழங்குகின்றோம்: ‘வூஸ்’ பிரதிநிதி ஜேசுசகாயம்

🕔 November 27, 2016

wuse-03– றிசாத் ஏ காதர் –

னியார் தொழிற்துறை மீதான ஆர்வத்தினை இளைஞர்களிடையே ஏற்படுத்துவதோடு, தொழிற் சந்தையின் கேள்விகளுக்கேற்ப இளைஞர்களை திறனுள்ளவர்களாக உருவாக்கும் பெரு முயற்சியினை, உலக கனடிய பல்கலைக்கழக (WUSC) நிறுவனம் முன்னெடுத்து வருகிறது என்று, அந்த அமைப்பின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எஸ். ஜேசுசகாயம் தெரிவித்தார்.

உலக கனடிய பல்கலைக்கழக (WUSC) நிறுவனத்தினால் ‘தொழிலுக்குத் திறன் வாழ்கைக்குத் தொழில்’ எனும் தொனிப்பொருளில் சமூக சந்தைப்படுத்தல் செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

சர்வதேச தொழில் சந்தைக்கு ஏற்றால் போல் இலங்கையிலுள்ள இளைஞர், யுவதிகளை தயார்படுத்தலே இச் செயற் திட்டத்தின் நோக்கமாகும்.

கடந்த காலங்களில் ‘வூஸ்’ நிறுவனமானது தொழிற்கல்வி சான்றிதழினை மையப்படுத்தியே இளைஞர், யுவதிகளுக்கு பயிற்சி வழங்கியது. ஆனால் தற்போது தொழில் சந்தையில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை மையப்படுத்தியதாகவே இச் செயல் திட்டம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இச் செயல் திட்டத்தில் கீழ் அம்பாறை மாவட்டமும் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்று சமூக நலன்புரி (SWOAD) அமைப்பின் காரியாலய கேட்போர் கூடத்தில், திட்ட முகாமையாளர் பிரேமலதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த செயலமர்வில் கலந்து கொண்டபோதே, WUSC அமைப்பின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எஸ். ஜேசுசகாயம் மேற்கண்டவாறு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார்.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘சமூக சந்தைப்படுத்தல்’ செயல் திட்டத்தின் ஊடாக சுற்றுலா – விருந்தோம்பல் , மோட்டார் வாகன பழுதுபார்த்தல் கட்டிட நிர்மாணத் துறை மற்றும் தகவல் தொடர்பாடல் போன்ற நான்கு துறைகளுக்கே அதிகமான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவ் வெற்றிடங்களை இளைஞர், வதிகளைக் கொண்டு நிரப்புவதற்கு WUSC நிறுவனம், SWOAD நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதாவும் தேவசகாயம் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நமது இளைஞர், யுவதிகளை அரச தொழில் எனும் மாயவலைக்குள் இருந்து முதலில் மீட்டெடுக்கவேண்டும். அதன் பின்னர் தற்போது எழுந்துள்ள தொழிற் சந்தை பற்றிய அறிவை வழங்கவேண்டும். நமது நாட்டில் கணிசமான தொழில் வெற்றிடங்கள் சுற்றுலாத் துறையிலும், கட்டிட நிர்மாணத்துறையிலும் காணப்படுகின்றன. ஆனால் தொழிலுக்கு பொருத்தமானவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாதுள்ளது. இதுவே இன்று தனியார் துறையினர் எதிர்கொள்கின்ற சவாலாகும். அதற்காகவே தற்போது WUSC நிறுவனம் தொழில் வெற்றிடங்களை மையப்படுத்தியே இளைஞர் யுவதிகளை பயிற்றுவிக்க முன்வந்துள்ளது” என்றார்.

மேலும், தனியார் துறை தொழில் தருநர்களை ஒன்றியமாக பதிவு செய்து, அதனூடாக வான்மைமிக்க சேவையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் எஸ்.ஜேசுசகாயம் குறிப்பிட்டார்.

இச் செயல் திட்டமானது முதற்கட்டமாக 04ஆயிரம் இளைஞர், யுவதிகளை தொழிற்சந்தைக்கு தயார்படுத்தும் பொருட்டு – இலங்கையின் வடக்கு, வடமேல், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.wuse-01 wuse-02 wuse-05 wuse-04

Comments