லொறி கவிழ்ந்து விபத்து

🕔 November 26, 2016

accident-013– க. கிஷாந்தன் –

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து கொழும்பு – மீகொட பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று இன்று சனிக்கிழமை மாலை விபத்துக்குள்ளாகியது.

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பிரதான நகரத்தில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக, குறித்த லொலி பாதை அருகில் இருந்த கடை ஒன்றின் முன்னால் முட்டி மோதியது.

சாரதியின் கவனயீனமே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்தனர் என்றும், எனினும் பாதுகாப்பாக உயிர் தப்பியுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறியின் இருந்த 05 லட்சம் ரூபா பெறுமதியான மரக்கறி வகைகளை  பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.accident-011 accident-012

Comments

புதிது பேஸ்புக் பக்கம்