மு.கா. தலைவரின் இப்தார் நிகழ்வு
🕔 June 29, 2015
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்த – இப்தார் (நோன்பு துறக்கும்) நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லை ‘வோட்டர்ஸ் எட்ஜ்’ ஹோட்டலில் இடம்பெற்றது.
மேற்படி நோன்பு துறக்கும் நிகழ்வில், வெளிநாட்டு ராஜதந்திரிகள், அரசியல் பிரமுகர்கள், இஸ்லாமிய அறிஞர்கள், கல்விமான்கள் மற்றும் ஊடகவியலாளர் எனப் பலர் கலந்து கொண்டனர்.
சுமார் 1500 பேர் இந் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.