காரைதீவில் கைக்குண்டு மீட்பு

🕔 November 22, 2016


grenade-986
ம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்று இன்று செவ்வாய்கிழமை மீட்கப்பட்டது.

வீதியோரத்தில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக நிலத்தை தோண்டியபோது இந்தக் கைக்குண்டு மீட்கப்பட்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

காரைதீவு கந்தசாமி கோவில் வீதி 02 ஆம் குறுக்குத் தெரு புனரமைக்கப்பட்டமை தொடர்பான விளம்பர பலகையினை நடுவதற்காக, வீதியோரத்தை தோண்டியபோது நிலத்தில் மேற்படி கைக்குண்டு காணப்பட்டது.

இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பொத்துவில் அறுகம்பையிலுள்ள குண்டு மீட்கும் விசேட அதிரடிப்படையினரை வரவழைத்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்