சீரற்ற காலநிலை தொடரும்; பொதுமக்கள் அவதானம்

🕔 November 21, 2016

Extreme weather - 097நாடு பூராகவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் இடி, மின்னல் தாக்கமும் அதிகமாக காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் இது குறித்து அவதானமாகச் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் தொடர்ந்தும் இலங்கையில் நிலைத்து நிற்கும் என்பதனால் வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என்று திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இடி, மின்னல் கூடுதலான தாக்கத்தை செலுத்தும் என்பதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அந்தத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்