முஸ்லிம் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்: அகப்பட்டார் சந்தேக நபர்
முஸ்லிம் இளைஞர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை கல்ஹின்னை அன்கும்புற பிரதேசத்தில் இடம்பெற்றது.
சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி இளைஞர்கள் இருவரும் வீதியின் ஓரமாக நின்று கொண்டிருந்தபோது, காரில் வந்தவர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், அவர்களில் ஒருவரை ரி56 ரக துப்பாக்கியுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைதானவர் கண்டியைச் சேர்ந்த முகம்மது அலி என்பவராவர்.
இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட காரினை பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைப்பற்றியுள்ளர்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே, இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீடியோ