வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

🕔 November 19, 2016
ganja-022– பாறுக் ஷிஹான் –

யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் பகுதியில் தனது வீட்டு வளவில் கஞ்சா செடி வளர்த்த ஒருவரை   பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸார் இரவு கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் தனது வீட்டு முற்றத்தில் கஞ்சா செடிகளை  வளர்த்து  வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, குறித்த வீட்டிற்கு சென்ற பொலிஸார், சந்தேக நபரை  கைது செய்ததுடன் கஞ்சா செடிகளையும் கைப்பற்றினர்.

2ஆம் குறுக்குத்தெரு மணியம்தோட்டம் யாழ்ப்பாணம் எனும் இடத்தினைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் ராஜேந்திரன்(வயது 32)  என்பவரே இவ்வாறு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் மூன்றும் 23 சென்ரி மீற்றர் 16 சென்ரிமீற்றர் மற்றும் 18 சென்ரிமீற்றர்  உயரம் கொண்டவையாகும்.ganja-011

Comments

புதிது பேஸ்புக் பக்கம்