71 ஆவது பிறந்த நாளை, கேக் வெட்டிக் கொண்டாடினார் மஹிந்த

🕔 November 18, 2016

mahinda-011–  முகம்மட் –

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்த நாள் இன்றாகும்.

இதனையொட்டி, இன்று காலை சமய வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், தனது மெதமுலன வீட்டில் குடும்பத்தாருடன் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

MR எனும் எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட பிறந்த நாள் கேக்கை இதன்போது மஹிந்த வெட்டினார்.

சிராந்தி ராஜபக்ஷ, மஹிந்தவுக்கான முதல் கேக் துண்டினை ஊட்டி விட, மஹிந்த அங்கிருந்த குடும்ப உறவுகள் பலருக்கும் கேக் ஊட்டி மகிழ்ந்தார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று நாடாளுமன்றில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சரத் அமுனுகம உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, சோதிடம் மற்றும் மந்திரம் போன்ற விடயங்களில் அதீத நம்பிக்கையுடைய மஹிந்த ராஜபக்ஷ, முன்னர் சிறியளவான தங்கக் கோல் ஒன்றினை பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வேளைகளில் கையில் வைத்திருப்பதைக் காண முடிந்தது.

ஆனால், அண்மைக் காலமாக – அந்தத் தங்கல் கோலினை மஹிந்த ராஜபக்ஷவின் கைகளில் காணமுடியாதுள்ள போதிலும், அவரின் வலது கையில் மணிகளாலான காப்பு போன்ற ஒன்றினை புதிதாக அணிந்துள்ளமையினைக் காணக்கிடைக்கிறது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்