இலங்கையர்கள் 32 பேர் ஐ.எஸ். அமைப்பில் இணைவு; நீதியமைச்சர் நாடாளுமன்றில் தெரிவிப்பு
இலங்கையர்கள் 32 பேர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்ற நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இவர்கள் சிரியாவுக்குச் சென்று, அங்கிருந்தே ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளனர் என்னும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சில இணையத்தளங்கள் போலியான வதந்திகளை பரப்பக்கூடிய உண்மையற்ற தகவல்களை வெளியிடுகின்றன என்றும், இதனால் பொதுமக்கள் பிழையகா வழிநடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக செய்திகளை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட செய்தி இணையத்தளமொன்றின் உரிமையாரை, சர்வதேச பொலிஸார் ஊடாக கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்து சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் நீதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.