சிலாவத்துறை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை; அமரவீர, றிசாட் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு

🕔 November 16, 2016

 

rishad-0124ன்னார் சிலாவத்துறையில் ஏற்பட்டுள்ள மீனவர்களின் பிரச்சினையை இழுத்தடிக்காமல் அதற்கு உரிய தீர்வை கண்டு சமூக நல்லிணக்கத்தை பேணுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் நேரடியாக விடுத்த வேண்டுகோளை ஏற்று, அந்த பிரதேசத்தின் நிலவரங்களை பார்வையிட்டு அறிக்கை சமர்பிக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் அடுத்த வாரம் அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

கொழும்பு கடற்றொழில் அமைச்சில் இன்று புதன்கிழமை காலை இது தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பங்கேற்றார்.

தென்னிலங்கை மீனவர்கள் காயக்குழியில் பாடு அமைத்து தொழிலை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டமையினால் எழுந்துள்ள பிரச்சினைகளயும், பாரம்பரியமாக அந்த பிரதேசத்தில் மீன்பிடிக்கும் மீனவர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களையும் இதன்போது அமைச்சர் றிசாத் தெளிவுபடுத்தினார்.

கடற்றொழில் அமைச்சருக்கு அங்குள்ள நிலமைகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விரிவாக எடுத்துரைத்தார். இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்ட நீர்கொழும்பு மீனவர்களின் பிரதிநிதிகளும் முசலி மீனவர்களின் பிரதிநிதிகளும் தத்தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

“மீனவர்களுக்கிடையிலான பிரச்சினையினால் இனங்களுக்கிடையேயான சுமூக நிலை பாதிக்கப்படக்கூடாது. இந்தப்பிரச்சினையை சமரசமாக தீர்த்துவைக்க வேண்டும்” என்று அமைச்சர் ரிஷாட் வலியுறுத்தினார்.

சிலாவத்துறை மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கடந்த வாரம் மகிந்த அமரவீரவிடம், அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் பிரஸ்தாபித்ததையடுத்து, அதே வாரம் கடற்றொழில் அமைச்சில், அமைச்சர் மகிந்த அமரவீரவின் கூட்டமொன்று இடம்பெற்றது.

அந்த கூட்டத்தில் பிரதியமைச்சர்களான அமீரலி, பைசல் காசிம், நாடாமன்ற உறுப்பினர்களான எம்.எம். மஸ்தான், எம்.எஸ். தௌபீக் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹுனைஸ் பாருக்  ஆகியோரும் பங்குபற்றி தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலானாதனும் கலந்து கொண்டார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)rishad-0123

Comments

புதிது பேஸ்புக் பக்கம்