எயிட்ஸ் நோயாளர்களின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

🕔 November 15, 2016

aids-098யிட்ஸினால் பாதிக்கப்பட்ட 34 பேர் இவ்வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் உயிரிழந்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே கூறியுள்ளார்.

எயிட்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டமையை, இவர்கள் முன்னமே அறிந்திராமல் இருந்தமையே, இந்த மரணங்கள் அதிகரிக்கக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, தற்போது வரை – நாட்டில் எயிட்ஸ் நோய் காரணமாக 405 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 50 வீதத்திற்கும் மேற்பட்டவை கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இவ் வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 215 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்